ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ?
ஜீவ
காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தவே
வள்ளலார் "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார்.
படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள்
மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக
விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு
காட்டினால் போதுமா?! உன்ஜீவனை கருணையுடன் பார்!? என்கிறார்
திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்!
சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது
மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை பிறந்து பிறந்து செத்து செத்து
துன்பப்படும் உன் ஜீவனை கருணையுடன்
பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே!
பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என
தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கு! ஏன் ? உன் ஜீவனும்
இன்பமாக வாழ வழி காணக் கூடாதா? பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடம்
கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது
பரோபகாரம்! உன்ஜீவனை ரட்சிக்க அது ஒருவழி! உன் ஜீவனை கருணையோடு பார்!
உன்
ஜீவன் கடைத்தேற யாது வழி? உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்?
எங்கு இருந்து வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது
வழி? யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதை சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை
பணித்து உபதேசம் தீட்சை கேள்! உன் ஜீவனை ரட்சிக்க வழி தேடிக் கொள்!
ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஓவ்வொரு ஞானியும் முதலில்
தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை
சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே ஜீவர்களுக்கு சேவை செய்தனர்! சட்டியில்
இருந்தால் தானே அகப்பையில் வரும்! முதலில் நீ உருப்படும் வழியை பார்?
உன்னிடம் பொருள் இருந்தால் அல்லவா பிறருக்கு உன்னால் உதவமுடியும்!? உன்
ஜீவன் அருள் பெற்று இருந்தால் அல்லவா பிற ஜீவர்களை கருணையுடன் கண்டு உதவ
முடியும்?!வள்ளலார் என்ற ஜீவன் கடும்தவம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகிய
இறைவன் அருள் பெற்றதால் தான் இறைமயமானதால் தான் வாடிய பயிரை கண்டும்
வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள் இருந்து தான் வெளிப்படனும்!
அதற்க்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான
தவம் செய்! நீ உன் ஜீவனை கருணையுடன் பார்! வள்ளலார் தான் ஜீவனை பார்த்தார்!
9 வயதில் இருந்து ஆன்மீக சாதனை செய்தார் செய்தார் செய்து கொண்டே
இருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்க்கொண்டார்! அருள் பெற்றார்! ஊன
உடலே ஒளியுடலாக ஓங்க பெற்றார்!
ஞான தானம் செய்வது
தங்க
ஜோதி ஞான சபை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
கன்னியாகுமரி
- www.vallalyaar.com
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
No comments:
Post a Comment