Saturday 16 February 2013

யார் குரு?



சொல்பவன் குரு! கேட்பவன் சீடன் ! தெரியாததை தெரிவிப்பவன் குரு!  தெரிந்து தெளிந்து கொள்பவனே சீடன்!  நாம் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் கற்று கொண்டே தான்  இருகிறோம்.  கல்வி கடவுள் சரஸ்வதி தேவியே! இன்னும் கற்று கொண்டு இருக்கிறாளாம். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என ஞான கிழவி அவ்வை கூறுகிறாள்!  ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரிடம் இருந்து கற்கிறோம். எல்லாரும் குருவே ! இயற்கையில் இருந்து மற்ற ஜீவராசிகளிடம் இருந்து எவ்வளவோ கற்று கொள்கிறோம்!   எல்லாமே குரு தான்!  அப்படியானால் குரு என தனித்து சொல்ல என்ன  காரணம்? எல்லாரும், எல்லாமும் பல விசயங்களை நமக்கு அறிவிக்கின்றனர் அவ்வளவுதான்!  எல்லாவற்றுக்கும் வாழ்க்கையை நெறிபடுத்த அறிவிப்பதே வேலை. இது குருவல்ல! யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, விழியின் உணர்வை  ஊட்டுகிறரோ அவரே குரு!  ஒப்பற்ற குரு ! சத்குரு ! ஞான குரு! நாம் யார் என ஒருவன் உணர வழி காட்டும் அந்த  ஒப்பற்ற குருவை! பெற்றாலே ஒருவன் வாழ்க்கை கடை தேற முடியும் ! உலக வாழ்வில் சிறப்பாக நோயின்றி  வாழ்வாங்கு வாழ்ந்து இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு! அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டிம பிறப்பறுக்க, விழியால்  உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!  ஒப்பற்ற குருவே சத்குரு! சத்குருவே ஞான குரு! நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்!  இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவி பிணி தான்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வளர, வளர தான் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறான்! எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் அவன் நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே!  சூழ்நிலையிலே !  எந்தவொரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோரும் இறைவன் தன்னை   உணரும் சந்தர்ப்பத்தை அருள்கிறார்!! அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் நடந்தாலும் எல்லாருக்கும் இறைவன் அருள் புரிந்து ஞானம் பெற உதவுகிறார்!  இதில் பெரும்பங்கு ஞானிகளை சேரும்! இறைநிலை பெற்ற சாகவரம் பெற்ற ஞானிகள் இயல்பே அதுதான்! ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை   உணரவேண்டும் என்பதற்காக கர்மவினையால் துன்புறும் நிலை மாற்றி வழிகாட்டி கூடவே இருந்து காத்து அருள்கிறார்கள். நாம் யாரையும் அறிந்திருக்க வேண்டியது இல்லை! நம்மை அவர்கள் அறிவார்கள்! ஞானிகளுக்கு சாதி மதம் இனம் மொழி நாடு ஒன்றும் கிடையாது ! யாதும் ஊரே யாவரும் கேளீர்!  இதுவே அவர்கள் நிலை!  "என் கடன் பணி செய்து கிடப்பதே" எந்த வித பேதமும் இன்றி எல்லோருக்கும் வலிந்து வந்து உதவி, காத்து அருள்பவர்கள் தான் ஞானிகள்! எண்ணில்லா சித்தர் ஞானிகள் தோன்றியது நம் நாட்டிலே! இங்கு பிறந்த நாம் அதற்க்கு பெருமை படவேண்டும்!  கடந்த  நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்து, மரணமில்ல பெருவாழ்வு பெற்ற உன்னதமான பேரின்ப நிலை அடைந்தவர் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!

        இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டு தான் அடியேன் வாழ்கிறேன் !  இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தை தான் என்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்!  கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனை செய்து இராமலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியானனேன் ! எமக்கு இராமலிங்க சுவாமிகள் சுட்டிகாட்டி உணர்த்திய ஞான சித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்!  அடியேனை பக்குவபடுத்தி முதல் 12  ஆண்டு முடிவில் "கண்மணிமாலை" எழுதி வெளியிட வைத்தார்கள்! அடுத்த 12  ஆண்டிற்குள் என்னை குரு பீடத்தில் இருத்திவிட்டார் வள்ளலார். அடியேனை குருவாக இருத்தி உள்ளிருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே அடியேன் செய்த புண்ணியம்! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞான குருவாக இருக்கிறேன்! அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன்! செம்மையாக செய்துவைப்பதும் அவர்களே! உலகோரே வாருங்கள் !  உபதேசம் பெறுங்கள் ! தீட்சை பெறுவது அவசியம்!  அரிதான இப்பிறவி ஆண்டவனை அறியவே! காலம் தாழ்த்தாதீர்! கண் திறக்க வாருங்கள்! குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கு குழப்பம்.  தன் சாதியில் ஒரு சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம், தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம் . அரபியில் சொன்னாலும், ஹீப்ருவில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் சமஸ்கிரதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லாராலும் சொல்ல பட்டது  இறைவனை பற்றி மட்டுமே! உலகுக்கு ஆதி குரு முதல் குரு தட்சிணமூர்த்தி தான் ! இதுவே உண்மை !அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் ! அகத்தியருக்கும் அருணகிரிக்கும் உபதேசித்தான் ! இந்த வழி வந்த, வாழையடி வாழைஎன வந்தவர் தான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ! இவர்கள் உள்இருந்து உணர்த்த அடியேன் உபதேசம் தீட்சை வழங்குகிறேன். "நான் யார் "  எனவும் அறிவை தந்து, உணர்த்தி நம்மை வழி நடத்துபவரே உண்மை குரு!

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்  -  வேறோருவர்க்கும் எட்டாத புட்பம்   - இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே
முட்டாத பூசை இறையாத தீர்த்தம் ! இதை சொன்ன தெரிந்தவனே இறைவனை உணர்த்த தகுதியானவன்  ரகசியம் என இருப்பதை தெளிவு படுத்தி உணரவைப்பவனே குரு! புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. வருக பலன்  - ஆன்மலாபம்!  குருவாக இருந்து ஞானிகளின் அருளால் தீட்சை வழங்கி வருகிறேன், வாருங்கள்.

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி                                                                                                                                                                        தனிபெரும்கருணை
அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment