Thursday 10 January 2013

அருட்பெருஞ்சோதி திருவடி தீட்சை - உயிர் ஒளி கண்டு இறை ஒளி(அருட்பெருஞ்சோதி) காணுதல் தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி திருவடி தீட்சை - உயிர் ஒளி கண்டு இறை ஒளி(அருட்பெருஞ்சோதி) காணுதல் யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது? நான் யார்? உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!. இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள். திருவடி என்பது எது? உயிர் என்பது என்ன? உயிர் எங்கே உள்ளது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? உயிரை எப்படி பார்ப்பது? சத்தியஞான சபை என்பது என்ன? எழு திரை விளக்குவது எப்படி ? தவம் எப்படி செய்வது? ‘சும்மா இரு’ என்றால் என்ன ? இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.குருவிடம் முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள். கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்! தவம் செய்யுங்கள் குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை இல்லாதவர்கள் தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும். நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால் சேராமை எற்க ருளுவாய் - அம்மை திருப்பதிகம் தவம் - சும்மா இரு! மெய்ஞான சற்குரு வழியாக தெளிவு பெற உபதேசமும் அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி – யுக்தி - அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்! ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள் படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற வேண்டும். தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம் ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே! இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும் குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென ! கண் திறந்து தான் தவம் செய்யவேண்டும். இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள் நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே! மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்! “என் இரு கண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார் தான் செய்வார்?” - திருஅருட்பா 2770 வள்ளலார் தன் இருகண் களாலாலும் செய்த பெருந்தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்.வள்ளல் பெருமான் கண்மணி பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன. இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை உணர்தலே. தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும். உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது. நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் ! வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில், குலங்களில் மலைகளில் தேடாதீர். தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன் பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும். தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று நான் யார் என்பதை உணர வேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க வேண்டும். புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது , இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள். இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர். உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள் பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி! ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை என்னும் காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!! கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது. துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்! பெற்றார் ஒளி உடலை!!!!! தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்! இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார். ஞான பாதை தான் மிக எளிதானது. ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம் சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம் பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை இறைவனிடம் சேர்க்கும். நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்! எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்!! நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால் தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்!! தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில் நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடரவேண்டும்!! அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்! கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்!! மனம் அங்கே நிற்பதால் கை கூடும்!! இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே!! "விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் ருறுக்கியொ ரோப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டி களிம்பறுத் தானே " - திருமந்திரம் சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்!! நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!! இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக உச்சியில் இருந்து உள்ளங்கால் வாரை உள்ள 72000 நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்! நோய் நொடி வராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்! இறைஅருள் கிட்டும் ! எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்! ஜோதி தரிசனம் கிட்டும்! திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்! உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலாவலாம் ! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே! யார் குரு? சொல்பவன் குரு! கேட்பவன் சீடன் ! தெரியாததை தெரிவிப்பவன் குரு! தெரிந்து தெளிந்து கொள்பவனே சீடன்! நாம் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் கற்று கொண்டே தான் இருகிறோம். கல்வி கடவுள் சரஸ்வதி தேவியே! இன்னும் கற்று கொண்டு இருக்கிறாளாம். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என ஞான கிழவி அவ்வை கூறுகிறாள்! ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரிடம் இருந்து கற்கிறோம். எல்லாரும் குருவே ! இயற்கையில் இருந்து மற்ற ஜீவராசிகளிடம் இருந்து எவ்வளவோ கற்று கொள்கிறோம்! எல்லாமே குரு தான்! அப்படியானால் குரு என தனித்து சொல்ல என்ன காரணம்? எல்லாரும், எல்லாமும் பல விசயங்களை நமக்கு அறிவிக்கின்றனர் அவ்வளவுதான்! எல்லாவற்றுக்கும் வாழ்க்கையை நெறிபடுத்த அறிவிப்பதே வேலை. இது குருவல்ல! யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, விழியின் உணர்வை ஊட்டுகிறரோ அவரே குரு! ஒப்பற்ற குரு ! சத்குரு ! ஞான குரு! நாம் யார் என ஒருவன் உணர வழி காட்டும் அந்த ஒப்பற்ற குருவை! பெற்றாலே ஒருவன் வாழ்க்கை கடை தேற முடியும் ! உலக வாழ்வில் சிறப்பாக நோயின்றி வாழ்வாங்கு வாழ்ந்து இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு! அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டிம பிறப்பறுக்க, விழியால் உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு! ஒப்பற்ற குருவே சத்குரு! சத்குருவே ஞான குரு! நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்! இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவி பிணி தான்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வளர, வளர தான் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறான்! எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் அவன் நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே! சூழ்நிலையிலே ! எந்தவொரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோரும் இறைவன் தன்னை உணரும் சந்தர்ப்பத்தை அருள்கிறார்!! அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் நடந்தாலும் எல்லாருக்கும் இறைவன் அருள் புரிந்து ஞானம் பெற உதவுகிறார்! இதில் பெரும்பங்கு ஞானிகளை சேரும்! இறைநிலை பெற்ற சாகவரம் பெற்ற ஞானிகள் இயல்பே அதுதான்! ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை உணரவேண்டும் என்பதற்காக கர்மவினையால் துன்புறும் நிலை மாற்றி வழிகாட்டி கூடவே இருந்து காத்து அருள்கிறார்கள். நாம் யாரையும் அறிந்திருக்க வேண்டியது இல்லை! நம்மை அவர்கள் அறிவார்கள்! ஞானிகளுக்கு சாதி மதம் இனம் மொழி நாடு ஒன்றும் கிடையாது ! யாதும் ஊரே யாவரும் கேளீர்! இதுவே அவர்கள் நிலை! "என் கடன் பணி செய்து கிடப்பதே" எந்த வித பேதமும் இன்றி எல்லோருக்கும் வலிந்து வந்து உதவி, காத்து அருள்பவர்கள் தான் ஞானிகள்! எண்ணில்லா சித்தர் ஞானிகள் தோன்றியது நம் நாட்டிலே! இங்கு பிறந்த நாம் அதற்க்கு பெருமை படவேண்டும்! கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்து, மரணமில்ல பெருவாழ்வு பெற்ற உன்னதமான பேரின்ப நிலை அடைந்தவர் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டு தான் அடியேன் வாழ்கிறேன் ! இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தை தான் என்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்! கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனை செய்து இராமலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியானனேன் ! எமக்கு இராமலிங்க சுவாமிகள் சுட்டிகாட்டி உணர்த்திய ஞான சித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்! அடியேனை பக்குவபடுத்தி முதல் 12 ஆண்டு முடிவில் "கண்மணிமாலை" எழுதி வெளியிட வைத்தார்கள்! அடுத்த 12 ஆண்டிற்குள் என்னை குரு பீடத்தில் இருத்திவிட்டார் வள்ளலார். அடியேனை குருவாக இருத்தி உள்ளிருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே அடியேன் செய்த புண்ணியம்! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞான குருவாக இருக்கிறேன்! அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன்! செம்மையாக செய்துவைப்பதும் அவர்களே! உலகோரே வாருங்கள் ! உபதேசம் பெறுங்கள் ! தீட்சை பெறுவது அவசியம்! அரிதான இப்பிறவி ஆண்டவனை அறியவே! காலம் தாழ்த்தாதீர்! கண் திறக்க வாருங்கள்! குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கு குழப்பம். தன் சாதியில் ஒரு சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம், தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம் . அரபியில் சொன்னாலும், ஹீப்ருவில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் சமஸ்கிரதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லாராலும் சொல்ல பட்டது இறைவனை பற்றி மட்டுமே! உலகுக்கு ஆதி குரு முதல் குரு தட்சிணமூர்த்தி தான் ! இதுவே உண்மை !அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் ! அகத்தியருக்கும் அருணகிரிக்கும் உபதேசித்தான் ! இந்த வழி வந்த, வாழையடி வாழைஎன வந்தவர் தான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ! இவர்கள் உள்இருந்து உணர்த்த அடியேன் உபதேசம் தீட்சை வழங்குகிறேன். "நான் யார் " எனவும் அறிவை தந்து, உணர்த்தி நம்மை வழி நடத்துபவரே உண்மை குரு! வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் - வேறோருவர்க்கும் எட்டாத புட்பம் - இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசை இறையாத தீர்த்தம் ! இதை சொன்ன தெரிந்தவனே இறைவனை உணர்த்த தகுதியானவன் ரகசியம் என இருப்பதை தெளிவு படுத்தி உணரவைப்பவனே குரு! புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. வருக பலன் - ஆன்மலாபம்! குருவாக இருந்து ஞானிகளின் அருளால் தீட்சை வழங்கி வருகிறேன், வாருங்கள். தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெரும்கருணை அருட்பெருஞ்சோதி கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!! "கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற" கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம் பெறார்! ஏன்? கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது. நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!! கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்! மாயை அற்ப காட்சிகளையும் அற்ப சித்திகளையும் அருளும்! அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான் எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமாந்து ஆணவம் மிகுந்து கெட்டுவிடுவான்! அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த கற்பனையே உயர் நிலை என கொண்டாடும் கண் மூடி வழக்கமெலாம் மண்மூடி போகட்டும் போகட்டும் என்று கூறுகிறார்! கண்ட கண்ட வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து போகின்றார்களே என்ற வேதனையால் தான் வள்ளல் பெருமான் இதைக்கூறினார்! இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்! இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது ! திருவடி உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு பெற திருவடி தீட்சை பெற கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு வருக! உங்கள் நடுக்கண்ணை திறந்து ஞானம்பெற வழிகாட்டுவார் வள்ளலார்! கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும்! கண்ணை திறந்தால்தானே, நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்தால் தானே கண்ணீர் பெருக்கெடுத்து நம் உடலும் நனையும். ஆகவே மெய்யுணர்வு பெற்று கண்ணை திறந்து இருந்துதான் சும்மா இருந்துதான் தவம் செய்ய வேண்டும்!! இது ஒன்று தான் ஞான வழி. கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் தியானமும் ஞானத்தை தராது?! உங்கள் அகக்கண்ணை ஞான சற்குரு திறந்து திருவடி தீட்சை தருவார்! உங்கள் அறிவுக்கண் திறக்கும்! மனக்கண் திறக்கும்! ஞானக்கண் பெறுவீர்கள்! ஊனக்கண்ணால் விழித்திருந்து பார்த்து உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் அடைந்த தீர்வது என்ற ஆன்ம பசியோடு சும்மா இருந்து மனதில் எண்ணமே தோன்றாத படி மனதையே திருவடியில் ஒப்படைத்து தனித்திருந்து தவம் செய்பவனே கண்ணை திறந்து இருந்து தவம் செய்பவனே ஞானம் பெறுவான்! பதவி - முக்தி - மோட்சம் கிட்டும்! வினை கழித்து தன்னை உணர்வது எப்படி? "வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்" நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே! இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்! "வினை போகமே ஒரு தேகங்கண்டாய்" என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்! அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! வினை தீரத்தீர ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை! வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம். குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்! மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது. தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும். மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!? மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும். உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்! அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம். இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். "தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார். இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான். சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்! சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான். எப்படியோ சாகிறான்! சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்! சாகாதவனே சன்மார்க்கி! இறைவன் திருவடி கண்மணியே " மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக் கழகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே" அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல் இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்! மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல! மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள். இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார். அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார். ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றை த் தான் சொன்னார்கள்! "கண்ணின் மணியை கருத்தின் தெளிவை விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணுகின்றவர் நாந் தொழுந் தெய்வமே" தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்தாயுமான சுவாமிகள். காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்' என் திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர். 1008 இதழ் தாமரை எப்படி மலரும்? காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன் எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று உபதேசம் செய்து உள்ளார். உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!? உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது. இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும். "தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை" நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி அனலால் இளகி கோழை கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம். தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும். அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008 பகுதியாக சிறு சிறு பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008 இதழ் தாமரை என்றனர். ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008 மாற்று பொற்கோவில் என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008 மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான். எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம். விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே! ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ? ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தவே வள்ளலார் "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார். படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள் மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு காட்டினால் போதுமா?! உன்ஜீவனை கருணையுடன் பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை பிறந்து பிறந்து செத்து செத்து துன்பப்படும் உன் ஜீவனை கருணையுடன் பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே! பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கு! ஏன் ? உன் ஜீவனும் இன்பமாக வாழ வழி காணக் கூடாதா? பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடம் கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது பரோபகாரம்! உன்ஜீவனை ரட்சிக்க அது ஒருவழி! உன் ஜீவனை கருணையோடு பார்! உன் ஜீவன் கடைத்தேற யாது வழி? உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்? எங்கு இருந்து வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது வழி? யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதை சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை பணித்து உபதேசம் தீட்சை கேள்! உன் ஜீவனை ரட்சிக்க வழி தேடிக் கொள்! ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஓவ்வொரு ஞானியும் முதலில் தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே ஜீவர்களுக்கு சேவை செய்தனர்! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! முதலில் நீ உருப்படும் வழியை பார்? உன்னிடம் பொருள் இருந்தால் அல்லவா பிறருக்கு உன்னால் உதவமுடியும்!? உன் ஜீவன் அருள் பெற்று இருந்தால் அல்லவா பிற ஜீவர்களை கருணையுடன் கண்டு உதவ முடியும்?!வள்ளலார் என்ற ஜீவன் கடும்தவம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகிய இறைவன் அருள் பெற்றதால் தான் இறைமயமானதால் தான் வாடிய பயிரை கண்டும் வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள் இருந்து தான் வெளிப்படனும்! அதற்க்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான தவம் செய்! நீ உன் ஜீவனை கருணையுடன் பார்! வள்ளலார் தான் ஜீவனை பார்த்தார்! 9 வயதில் இருந்து ஆன்மீக சாதனை செய்தார் செய்தார் செய்து கொண்டே இருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்க்கொண்டார்! அருள் பெற்றார்! ஊன உடலே ஒளியுடலாக ஓங்க பெற்றார்! ஞான தானம் செய்வது தங்க ஜோதி ஞான சபை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கன்னியாகுமரி - www.vallalyaar.com குருவை வணங்கக் - கூசி நின்றேனோ! குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ! Contact in English: Vijayan – 09916495495 Vimal – 9962217654 .தமிழில் தொடர்பு கொள்ள. அரவிந்தன் – 9944009497 லோகநாதன் – 9380225365 வினோத் – 9944767995 shivamjothi@gmail.com


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி                                                                                                                                                                

தனிபெரும்கருணை
அருட்பெருஞ்சோதி

திருவடி தீட்சை -  உயிர் ஒளி கண்டு இறை ஒளி(அருட்பெருஞ்சோதி) காணுதல்

யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது?  நான் யார்?  உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!.  இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம்  வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள்.

திருவடி என்பது எது?

உயிர் என்பது என்ன?

உயிர் எங்கே உள்ளது?

அதை பார்க்க தடை என்ன?

தடையை எப்படி தீர்ப்பது?

உயிரை எப்படி பார்ப்பது?

சத்தியஞான சபை என்பது என்ன?

எழு திரை விளக்குவது எப்படி ?

தவம் எப்படி செய்வது?

''சும்மா இரு’ என்றால் என்ன ?

இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.குருவிடம் முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல்  நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள். கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்!  தவம் செய்யுங்கள் குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை  இல்லாதவர்கள்  தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் -  அம்மை திருப்பதிகம்