Saturday 16 February 2013
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!!
"கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற"
கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம் பெறார்! ஏன்? கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது. நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!! கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்! மாயை அற்ப காட்சிகளையும் அற்ப சித்திகளையும் அருளும்! அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான் எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமாந்து ஆணவம் மிகுந்து கெட்டுவிடுவான்! அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த கற்பனையே உயர் நிலை என கொண்டாடும் கண் மூடி வழக்கமெலாம் மண்மூடி போகட்டும் போகட்டும் என்று கூறுகிறார்! கண்ட கண்ட வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து போகின்றார்களே என்ற வேதனையால் தான் வள்ளல் பெருமான் இதைக்கூறினார்! இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்! இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை உலகுக்கு வழங்குகிறது ! திருவடி உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு பெற திருவடி தீட்சை பெற கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு வருக! உங்கள் நடுக்கண்ணை திறந்து ஞானம்பெற வழிகாட்டுவார் வள்ளலார்! கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும்! கண்ணை திறந்தால்தானே, நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்தால் தானே கண்ணீர் பெருக்கெடுத்து நம் உடலும் நனையும். ஆகவே மெய்யுணர்வு பெற்று கண்ணை திறந்து இருந்துதான் சும்மா இருந்துதான் தவம் செய்ய வேண்டும்!! இது ஒன்று தான் ஞான வழி. கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் தியானமும் ஞானத்தை தராது?! உங்கள் அகக்கண்ணை ஞான சற்குரு திறந்து திருவடி தீட்சை தருவார்! உங்கள் அறிவுக்கண் திறக்கும்! மனக்கண் திறக்கும்! ஞானக்கண் பெறுவீர்கள்! ஊனக்கண்ணால் விழித்திருந்து பார்த்து உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் அடைந்த தீர்வது என்ற ஆன்ம பசியோடு சும்மா இருந்து மனதில் எண்ணமே தோன்றாத படி மனதையே திருவடியில் ஒப்படைத்து தனித்திருந்து தவம் செய்பவனே கண்ணை திறந்து இருந்து தவம் செய்பவனே ஞானம் பெறுவான்! பதவி - முக்தி - மோட்சம் கிட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment